நெய் மணக்கும் பிரியாணி இங்கே கிடைத்தாலும் அன்போடு நீ பிசைந்து தந்த பழைய சோற்றின் சுவைக்கு ஈடு இணை இல்லை கண்ணம்மா.....
முறுமுறுவென்று வறுத்த சிக்கன் KFC இங்கே கிடைத்தாலும் ஆசை ஆசையாய் நீ பொரித்துத் தந்த கொத்தவரங்காய் வத்தலிலும் மோர் மிளகாயிலும் அரிசி வடாகத்திலும் இருந்த ருசி இதில் இல்லை செல்லமே.....
அழகு அழகான Bottleகளில் வண்ண வண்ணமாய் சென்ட் இங்கே கிடைத்தாலும் உன் கூந்தல் வாசனைக்கு நிகரான நறுமணம் இதில் இல்லை உயிரே...
அலுவலகத்திலும் சரி.. அறையிலும் சரி இருபத்துநான்கு மணி நேரமும் இங்கே AC இருந்தாலும் ஊரில் ஒரு வெயில் நாளில் மின்சாரம் நின்று மின்விசிறி சுழலாமல் ஓலை விசிறியால் நீ விசிறிவிட்டபோது கிடைத்த இதமான தென்றல் இந்த ஜில்லிப்பில் இல்லை கண்மணியே..
முகத்து வியர்வையை துடைக்க Tissue பேப்பர்கள் இங்கே கிடைத்தாலும் உன் சேலை முந்தானையால் என் முகத்தை பூப்போல ஒற்றி எடுப்பாயே அப்போது எனக்குள் உண்டாகும் சிலிர்ப்பு இதில் இல்லை என் அம்முவே...
இங்கே தாகம் தணிக்க பெப்சி முதல் எல்லாவகை குளிர்பானங்கள் கிடைத்தாலும் மாங்காய் துண்டு வெட்டிப்போட்டு பச்சைமிளகாய் கீறிப்போட்டு கடுகு கறிவேப்பிலை போட்டு தாளித்து மோர் தருவாயே அந்த ருசி இதில் இல்லை தங்கமே...
உலகத்தில் உள்ள எல்லா நாட்டுப்பெண்களும் இங்கு உலாவினாலும் உன் அழகு எந்தப்பெண்ணிலும் இல்லை என் தேவதையே...
அலங்காரமான குளியலறையில் ஷவரில் அருவிபோல தண்ணீர் கொட்டினாலும் நீ பிளாஸ்டிக் குடத்தில் பிடித்து வைத்த காவிரி தண்ணீரின் குளிர்ச்சி இதில் இல்லை என் தேனே....
தலைவலிக்கு மாத்திரைகள் இங்கே கிடைத்தாலும் நீ கொடுத்த இஞ்சி தேநீருக்கு நிகரான நிவாரண மருந்து கிடையாது என் மானே...
இங்கே உள்ள விதவிதமான இசைக்கருவிகள் என்னைக் கவரவில்லை நம் குழந்தைகளின் பேச்சுக்கும் மயங்க வைக்கும் சிரிப்புக்கும் இணையான புது இசைக்கருவியை நான் இங்கே காணவில்லை என் குயிலே...
இங்கே நவீன ரக காரிலும் பறக்கும் தொங்கு வண்டியில் சொகுசாக பயணித்தாலும் ஊரில் பழைய சைக்கிளில் பெரியமகனை பின் இருக்கையிலும் சின்ன மகனை முன் இருக்கையிலும் வைத்துக்கொண்டு விடுமுறை நாட்களில் ஊர் சுற்றியபோது உண்டான ஆனந்தம் இங்கு இல்லை என் அன்பே...
இங்கே அசத்தலான ஓவியங்களையும் பிரமிக்க வைக்கும் சிற்பங்களை கண்டாலும் நம் பிள்ளைகள் வீட்டு வெள்ளைச் சுவரில் பென்சிலாலும் கரியாலும் கிறுக்கிய அழகு இதில் இல்லை என் அழகே....
பாலைவனத்து ஒட்டகம் தண்ணீரை தன் வயிற்றில் சேமித்து வைக்குமாம் அந்த தண்ணீர் ஒட்டகத்துக்கு ஆறு மாதங்களுக்கு தாங்குமாம் நானும் ஒரு ஒட்டகம் தான் என் சின்ன இதயத்துக்குள் உன் காதலை, நம் குழந்தைகளின் அன்பை சேமித்து வைத்திருக்கின்றேன் இது ... ஆறு மாதம் இல்லை ஆறு வருசங்கள் தாண்டி ஆயுள் முழுக்க இருக்கும்....
நான் உயில் எழுதுகிறேன்… என் சொத்து… என் அன்பு மனைவி! என் ஆசைக் குழந்தைகள்!
உன் பதில்
எனக்கு ஐஸ்வர்யாராய் தேவ்யானி சிநேகா மீரா ஜாஸ்மீன் பிடிக்கும் என்றேன்.
நீ அரவிந்தசாமி அஜீத் விஜய் விக்ரம் பிடிக்கும் என்பாய் என்றுதான் நினைத்தேன்.
நீ சொன்ன பதில் … ‘‘எனக்கு உங்களை பிடிக்கும்’’ ……………… வலித்தது….
சமையல் இரகசியம்!
இனியவளே! எல்லாரும்தான் சமைக்கிறார்கள்… ஆனால்… உன் சமையல் மட்டும் எப்படி இத்தனை ருசியாய் இருக்கு? எனக்கோர் சந்தேகம்… உள்ளங்கையில் தேனை தடவிக் கொண்டு சமைக்கிறாயோ…?
இனியவளே! குயில்கள் முன்னே பேசாதே! அவைகள் உன் குரலைக் கேட்டு பொறாமைப்படும்… ‘‘இது எந்த நாட்டு உயர்ஜாதிக்குயில்?’’ என்று…
வெளிநாட்டு வாழ்க்கை
நாங்களும் தியாகிகள்தான்… நாட்டிக்காக அல்ல… வீட்டிற்காக உறவுகளை எல்லாம் பிரிந்து உணர்வுகளை கட்டுப்படுத்தி கல்யாணமாகியும் சந்நியாசிகளாய்… பிரம்மச்சாரிகளாய்… மரக்கட்டைகளாய்… வாழும் மனித பொம்மைகள்!
என் மனவானில் உன்னைப் பார்க்காத நாட்கள் கறுப்பு அமாவாசைகள்…
உன் முகம் பார்க்கும் நாட்கள் பிரகாசமான பௌர்ணமிகள்!
உனைப் பிரிந்து… இந்தப் பாலைவனத்தில் தினம் தினம் கும்மிருட்டான அமாவாசை இரவுகளைப் பார்த்து … பெருமூச்சுக்களோடும் … ஏக்கத்தோடும் … வேதனைகளோடும்… விரக்தியோடும்… … வாழும் நான் பௌர்ணமி நிலாவைப் பார்க்க நெஞ்சு நிறைய கனவுகளோடு காத்திருக்கிறேன் கண்மணி!
குழந்தை!
அன்பே!
தாம்பத்யம் எனும் பத்திரிக்கையில் நாம் எழுதிய காதல் கவிதை!
திருமணம் எனும் ரோஜாச்செடியில் முளைத்த ரோஜா மொட்டு!
எடுப்பான பெண்கள் இடுப்பை ஆட்டிஆட்டி ஆடும் பெல்லி டான்ஸ்;… …………… எல்லாம் உண்டாம்.
நான் கவலைகள் மறக்கும் இடம் நீ எழுதிய அன்பு மடல்களும், என் பர்ஸில் புன்னகைக்கும் நம் குழந்தைகளின் போட்டோக்களும், உங்கள் நினைவுகளை அசைபோட்டபடி பேரீச்சம்பழ மரங்கள் நிறைந்த ப+ங்காக்களில் தனியே நடக்கும் தருணங்களும், அலுவலக களைப்போடு இரவுகளில் அயர்ந்து தூங்கும்போது நீயும், குழந்தைகளும் வரும் இனிய கனவுகளும்!
சின்னவயசில் படித்த மாயாஜால கதைகளில் வரும் மந்திரக்கம்பளம் எனக்கு வேண்டும்!
ஆயிரக்கணக்கான மைல்கள் தாண்டி இந்தப் பாலைவனத்தில் வாழும் நாங்கள் மந்திரக்கம்பளத்தில் ஏறி சொந்த நாட்டிற்குச் சென்று மனைவி, குழந்தைகள் முகத்தை பார்த்துவிட்டு விடிவதற்குள் வந்து விடுகிறோம்…
நாளை காலை ஆபீஸ் போக வேண்டும்!
புரிதல்
என் பெயர் அழகு என்று புரிந்தது… உன் உதடுகள் உச்சரித்தபோது!
அக்கறைவயல் வரப்பில்
மென்மையான புல்வெளியில் நீ நடந்தபோது கவலைப்பட்டேன்… உன் மிருதுவான பாதங்களை புற்கள் காயப்படுத்தி விடுமோ…?
ரசனை
கண்மணி! நைல் கட்டரில் நீ வெட்டிப்போட்ட உன் நகத்தில் பார்த்தேன்… பிறைநிலாவை!